தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது, இந்நிலையில் “புயல்” உருவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டிருந்தது. மலையின் “தீவிரம் குறையாத” நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் “பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை” அளிக்கப்பட்டது. இந்நிலையில் 10,11 மற்றும் 12 வது பயின்று வரும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தேர்வை எதிர் நோக்கி தயாராகி வருகின்றனர்.
10,11 மற்றும் 12 வது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு எழுத்து தேர்வுக்கு முன்னதாக, மாணவர்களுக்கு “செய்முறை தேர்வு” நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் செய்முறை தேர்வுக்கு எந்த தேதியும் அறிவிக்கப்படாமல் இருந்தது. தமிழக “பள்ளி கல்வி துறை” தேர்வு காண நாள்காட்டியின் அடிப்படையில், “தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும்” பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு “டிசம்பர் மாதம்” தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. “டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம்” தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு அரையாண்டு செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் 10,11 மற்றும் 12 வது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு செய்முறைத் தேர்வுகள் வரும் “டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி 6ம் தேதி” வரை நடைபெறும் என்றும் அதற்கான நடைமுறைக்கு தேவைகளை செய்யுமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது .