நாடக காதலுக்கு எதிர்ப்பு! மகளை தீவைத்து கொன்று தாயும் தீயில் கருகிய சோகம்
நாகப்பட்டிணம் மாவட்டம் வாழ்மங்கலத்தை சேர்ந்த கண்ணன்-உமாமகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வரை படித்துள்ளார். ஜனனிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஜனனியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
இதனை காதலர் ராஜ்குமாருக்கு தெரிவித்தார் ஜனனி, சுதாரித்து கொண்ட
ராஜ்குமார், ஜனனியை அழைத்துச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருக்கிறார். பின்பு ராஜ்குமார் மீது மகளைக் கடத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர் ஜனனியின் பெற்றோர். பின்னர் காவல்துறையினர் ஜனனிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் ஜனனியின் பெற்றோர்கள் அவமான அடைந்ததால் கடுமையாக மனஅழுத்தத்திற்கு உள்ளாகினர். இந்த சூழ்நிலையில் நேற்றிரவு இந்த விவகாரம் தொடர்பாக ஜனனிக்கும் தாய் உமா மகேஸ்வரிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் ஜனனியை வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து அவர் மேல் ஊற்றி தீ வைத்தார். சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடிக்க இறந்தார். இந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாமல் தாய் உமாமகேஸ்வரியும் கொளுத்திக் கொண்டார். இவரும் கவலைக்கிடமான நிலையில் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தனது மகன் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலேயே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக ராஜ்குமாரின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார். என்ன தான் இருந்தாலும் இந்த நிகழ்வை ஆணவக் கொலையாக சித்தரித்து பெரிதுபடுத்த,. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் அரசியல் செய்ய தயாராகி வருகின்றனர்.