Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்! இதுதான் காரணமா?

Daughter-in-law attacked mother-in-law with iron rod in Coimbatore district! Is this the reason?

Daughter-in-law attacked mother-in-law with iron rod in Coimbatore district! Is this the reason?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள்! இதுதான் காரணமா?

கோவை மாவட்டம் சூலூர் அப்புநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாறாள் (61). இவரது மகன் முத்துசாமி. முத்துசாமியின் மனைவி தங்கமணி. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்மாகியது. இவர்சூலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக முத்துசாமியின் தாயின் மீது உள்ள சொத்துக்களை தனது பெயரில் மாற்றி தர வேண்டும் எனவும் முத்துசாமியின் மனைவி தங்கமணி கேட்டு வந்துள்ளார்.

மேலும் தங்கமணி இவ்வாறு கேட்டதால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி தங்கமணி இந்த சொத்து விவரம் குறித்து அவரது மாமியார் மாறாள்யிடம்  தனது பெயரில் சொத்துக்களை மாற்றித் தருமாறு கூறியுள்ளார்.

ஆனால் தங்கமணியின் மாமியார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்  ஆத்திரம் அடைந்த தங்கமணி மாமியாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஆத்திரமடைந்த தங்கமணி அருகில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு அவரது மாமியாரை தாக்கியுள்ளார். அந்த தாக்குதலில் மாறாள்ளின் இடது கை முறிந்தது. இந்த தாக்குதல் குறித்து மாறாள் சூலூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version