குப்பை மேடாக மாறிய தவெக மாநாடு!! 12 லட்சம் அபராதம்.. அதிர்ச்சியில்!!

0
1026
The conference turned into a garbage heap!! 12 lakh fine.. in shock!!

TVK: தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடைபெற்று முடிந்த நிலையில் அந்த மாநாடு முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. அதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதில் தலைவர் விஜய் மாநாட்டின் கொள்கைகளை குறிப்பிட்டு இருந்தார். அந்த நிலையில் தவெக தலைவர் விஜய்-யை பார்க்கும் ஆர்வத்தில் தொண்டர்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் மாநாட்டில் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வெயிலின் தாக்கத்தால் சிலர் மயக்கம் அடைந்த நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

வி.சாலையில் அமைந்த தவெக மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் உடைந்து சேதமாகி உள்ளது. நாற்காலிகள் உடைந்து தூள் தூளாக கிடக்கின்றது. மாநாட்டு திடலே குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  உடைந்த நாற்காலிகளை கணக்கீடு செய்த பிறகு அதற்கான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

நாற்காலிகள் சேதமடைந்ததில் மட்டும் 12 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் மாநாடு முடிந்த பிறகு அனைவரும் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை விட்டு வெளியேறியதால் தள்ளுமுள்ளில் நாற்காலி உடைந்ததாக கூறப்படுகின்றது. அது மட்டும் அல்லாமல் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்ட விளம்பர பேனர்கள், கட்டவுட்டுகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.