Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடன் கொடுக்கக் கூடாத நாட்கள்..!! கடன் வாங்க கூடாத நாட்கள்..!!

நமது நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏதேனும் ஒரு கஷ்ட காலம் ஏற்படுகின்ற பொழுது, நாம் உதவ வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று தான் நமது உறவுகளிடம் மற்றும் நட்புகளிடம் கொடுக்கக்கூடிய பணத்தினால் எந்தவித பாதிப்பும், விரிசல்களும் ஏற்படாமல் இருப்பதும் மிகவும் முக்கியம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கடன் கொடுக்கக் கூடாத மற்றும் கடன் வாங்க கூடாத நாட்கள் என இருக்கின்றன. அதாவது இத்தகைய நாட்களில் நாம் கடன் கொடுத்தால் அல்லது வாங்கினால் அந்த கடனை அடக்க முடியாத சூழ்நிலை நமக்கு ஏற்பட்டு விடும், என்பதால் தான் ஒரு குறிப்பிட்ட நாட்கள், நட்சத்திரங்கள் மற்றும் திதிகளின் போது கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்று கூறுகின்றனர்.

கடன் கொடுக்கக் கூடாத நட்சத்திர நாட்கள்:
1. திருவாதிரை
2. பரணி
3. கிருத்திகை
4. ஆயில்யம்,
5. பூரம்
6. பூராடம்
7. பூரட்டாதி
8. கேட்டை
9. விசாகம்
10. சுவாதி
11. சித்திரை
12. மகம்

ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் நடக்கின்ற நாட்களில் கடன் கொடுக்கக் கூடாது. மேலும் இந்த நட்சத்திர நாட்களின் போது கடன் கொடுத்தால் நமது கைக்கு திரும்ப கிடைக்காது.

கடன் கொடுக்க மற்றும் கடன் வாங்க ஆகாத நாட்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும், அதே போல அமாவாசை மற்றும் அஷ்டமி திதிகள் அன்றும் கடன் கொடுக்க மற்றும் கடன் வாங்க ஆகாத திதிகள் ஆகும். கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, விசாகம், மூலம் இந்த ஏழு நட்சத்திரங்களில் கடன் கொடுக்க மற்றும் கடன் வாங்க ஆகாத நாட்கள் ஆகும். எனவே இந்த நாட்களை தவிர்த்து கவனமுடன் நாள், நட்சத்திரம் பார்த்து கடன் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டும்.

ஆனால் இந்த நாள், நட்சத்திரம் பார்த்து பணம் கொடுப்பது என்பது தொழில் சார்ந்த கொடுத்தல் வாங்கல் செயல்களுக்கு பொருந்தாது. நமது நெருங்கிய உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ அவர்களின் நிதி நெருக்கடி காரணமாக நாம் பணம் கொடுத்து உதவுவோம். அத்தகைய செயலை சரியான நாட்களில் செய்தால் மட்டுமே நமக்கும் நல்லது, நம்மிடம் கடன் வாங்குபவர்களுக்கும் நல்லது.

இந்த நாள் மற்றும் நட்சத்திரங்களை தவிர்த்து மற்ற நாட்களில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ செய்தால் தான் நாம் வாங்கிய கடனை அடைக்க முடியும். கடனை அடைப்பதற்கான சூழ்நிலையை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் கொடுக்கக் கூடாத நாட்களில் பணத்தை கொடுத்தால் பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமலே போய்விடும். அது நமக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், அதே சமயம் நம்மிடம் கடன் வாங்கிய உறவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Exit mobile version