Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!!! காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!!

#image_title

மீண்டும் டிடிஎப் வாசன் ஜாமீன் மனு தள்ளுபடி!!! காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு!!!

யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் அளித்த இரண்டாவது ஜாமீன் மனுவையும் காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிடிஎப் வாசன் இருசக்கர வாகனங்களை வைத்து சாகசங்கள் செய்து வீடியோ பதிவு செய்து அதை யூடியூபில் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர். யூடியூபில் கடல் போல ரசிகர் அளவை கண்டுள்ள டிடிஎப் வாசன் அவர்கள் அடிக்கடி வாகனங்களை அதிக வேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபடுவார்.

அவ்வாறு அதிவேகமாக வாகனங்களை ஓட்டும் பொழுது விபத்தை ஏற்படுத்துவதும் உண்டு விபத்தில் சிக்குவது உண்டு. அதன்படி சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் அருகே சென்னை-பெங்களூரு சாலையில் பைக்கை அதிவேகமாக இயக்கி பைக்கின் முன்சக்கரத்தை தூக்கி சாகசம் செய்தார்.

அப்போது பைக்கானது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து தலைகீழாக இரண்டு முறை சுழன்று பைக் விபத்துக்குள்ளானது. இதில் டிடிஎப் வாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனம் ஓட்டியதற்காக 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் மாவட்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிடிஎப் வாசன் அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு உத்தரவிட்டனர். இதையடுத்து டிடிஎப் வாசன் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே முதல் முறை ஜாமீனுக்காக டிடிஎப் வாசன் அவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக டிடிஎப் வாசன் வர்கள் ஜாமீனுக்காக மனு அளித்தார். ஆனால் அந்த மனுவையும் காஞ்சிபுரம் அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Exit mobile version