Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான்

Dead sea shore! This is the reason

Dead sea shore! This is the reason

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடற்கரை உள்ளது. அந்த கடற்கரையில் நேற்று மாலை சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர்  அவர்களின் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று அங்கு ஆய்வுகளை செய்தார்.

உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் கால்நடை உதவி மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னர், அது கடற்கரையில் புதைக்கப்பட்டது. இந்த கடல் பசு இனங்கள்  பெரும்பாலும் கடலில் அடி பகுதியில் தெளிந்த நீரோட்டம் உள்ள இடங்களில் தான் வாழும். கடலில் மாசு கலந்த பகுதிக்கு இந்த கடல் பசுக்கள் எப்போதும் செல்வதில்லை என்றும், உயிரிழந்த கடல்பசு வழி தவறி கரையோரம் வந்திருக்கலாம்.

மேலும் இங்கு வந்த காரணத்தினால் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு, பாறையில் அடிபட்டு  அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version