அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

0
336
Deadline ends in the next three days! Linking Aadhaar Number is Mandatory!

அடுத்த மூன்று நாட்களில் முடிவடையும் கால அவகாசம்! ஆதார் எண் இணைப்பது கட்டாயம்!

ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த ஆதார் எண்ணை பான் அட்டை, மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் கார்டு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கால அவகாசம் அனைத்தும் முடிவடைந்து வரும் 31 ஆம் தேதி உடன் பான் கார்டு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இந்த இணைப்பை மேற்கொள்ளாதவர்களின் பான் கார்டு  வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து செயலிழந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டு  இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஒரு சிலர் இதை இணைப்பை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். மேலும் பான் கார்டு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்திய ஆதாரை இணைக்க வேண்டும்.

ஆனால் இவ்வாறு  செலுத்தி ஆதார்  இணைப்பதற்கான காலக்கெடுவும் 31 ஆம்  தேதியுடன் முடிவடைகின்றது. இதை செய்ய தவறும் பட்சத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி செயலிழக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. காலக்காடு நீட்டிக்கப்படும் என எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. வருமான வரி சட்டம் 1961ம் படி ஆதார் எண்ணுடன் பான் எண்ணை  இணைப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருமானவரித்துறை பயனர்கள் தங்கள் பான் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்ள லிங்க் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. அந்த லிங்கின் மூலம் பான் எண்ணுடன்  ஆதார் லிங்க் செய்யப்பட்டுள்ளது என்பதனை நாம் தெரிந்து கொள்ளலாம்.