அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு!!

0
81
#image_title

அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு – எடப்பாடியார் அறிவிப்பு

அஇஅதிமுக கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் படிவங்களை தலைமையிடத்தில் ஒப்படைப்பதற்கான காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது ஏன் என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் அதிமுக உறுப்பினர்கள் படிவங்கள் விநியோகிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மே 5ம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிமுக தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் கழக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை தலைமைக் கழகத்தில் சேர்ப்பதற்கான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கழக மூத்த நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து புதிய உறுப்பினர் சேர்க்கைக் காண படிவங்களையும் உறுப்பினர் சேர்க்கை புதுப்பித்தல் தொடர்பான படிவங்களையும் தலைமைக் கழகத்தில் ஒப்படைப்பதற்கான காலகெடுவை நீட்டித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது, வரும் 21ம் தேதி வியாழக் கிழமை மாலை 5 மணிவரை நீட்டிக்கப்படுவதாகவும்,

இதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக கொண்ட ஒரே கட்சியாக அதிமுக கட்சி தமிழகத்தில் திகழ்வதாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களின் பேட்டி கூறியுள்ளார். ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் லட்சத்திற்கு மேல் உறுப்பினர் சேர்க்கையை போட வேண்டும் என டார்கெட் உள்ளதாகவும் அதிமுக தரப்பில் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த முறை இரண்டு கோடிக்கு மேல் உறுப்பினர் சேர்க்கை இருக்கும் என அதிமுக தரப்பில் பேசப்பட்டு வருவது குறிப்பிட்டுத்தக்கது.