அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு கெடு:? கட்டணம் செலுத்தவில்லை எனில் நிரந்தரமாக பெயர் நீக்கப்படும்?

0
127

அண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு கெடு:? கட்டணம் செலுத்தவில்லை எனில் நிரந்தரமாக பெயர் நீக்கப்படும்?

கொரோனா பரவலால் பள்ளித் தேர்வுகளை ரத்து செய்தது போன்றே கல்லூரி தேர்வுகளும்,இறுதி ஆண்டை தவிர,மற்ற எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று உயர்கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டது.இன்டர்நல் தேர்வு மதிப்பெண் அடிப்படையாக வைத்து செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்களை வழங்குமாறு கல்வித்துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.கடந்த வாரம் செமஸ்டர் ரிசல்ட் அண்ணா யுனிவர்சிட்டியால் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் ரிசல்டையும் நிறுத்தி வைத்துள்ளது அண்ணா யுனிவர்சிட்டி.

இன்நிலையில் அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது.அதில் செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை மாணவர்களுக்கு கேடு வைத்துள்ளது.ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு செப்டம்பர் 5 க்குள் அபராதத்துடன் கட்ட அனுமதி அளித்துள்ளது.செப்டம்பர் 7 வரை கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் நிரந்தரமாக கல்லூரிகளில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்று அண்ணா யுனிவர்சிட்டி கூறியுள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய அண்ணா பல்கலைகழகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்தது, மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு இதுதொடர்பாக மாணவர்கள் கடிதங்கள் அனுப்பி இருக்கின்றார்கள். இருந்த போதிலும் இதுவரை எந்த பதிலும் மாணவர்களுக்கு கிடைக்க பெறாததால் கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவர்களின் நிலை என்னவாகும் என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.