Tamil Nadu: பருவமழை காலத்தில் மிக வேகமாக பரவும் நோய்களில் ஒன்று டெங்கு காய்ச்சல். இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் 20,138 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் டெங்குவால் இந்த ஆண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் என்பது ஏடிஸ் எஜிப்டி இனத்தைச் சேர்ந்த பெண் கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு விதமான வைரஸ் காய்ச்சல் ஆகும். இது தீவிர காய்ச்சல் மற்றும் மரணத்தை விளைவிக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 20,138 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் விரைவில் மருத்துவமனைக்கு வந்ததால் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். அதில் தாமதமாக வந்தவர்கள் சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல வழிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.மேலும் மக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்று புறங்களில் நீர் தேங்கி இருந்தால் அதை சுத்தப்படுத்த வேண்டும் என குறிப்பிடுகிறார்.
அது மட்டும் அல்லாமல் சுகாதாரத்துறை கொசுக்களை கொல்ல, புகை தெளித்தல், நீர்களில் மறுந்து போடுதல் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர சிகிச்சை மையங்கள் செயல்படுத்தி வருகின்றன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனை மையங்களில் 35-ல் இருந்து 4,031 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.