Tamil Nadu: தமிழகத்தில் பருவநிலை காரணமாக மெட்ராஸ் எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை அதிக அளவில் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் முதலில் 1918 ஆம் ஆண்டு சென்னையில் முதலில் கண்டறியப்பட்டதால் மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறிகளாக கண் வலி , கண் சிவந்து போதல், கண்களில் நீர் வடிதல், கண்களில் அழுக்கு வெளியேறி இமைப்பகுதிகள் ஒட்டிக் கொள்ளுதல், கண்களில் தூசி அல்லது வேறு வெளிப்பொருள் உள்ளது போல் உணர்வு ஏற்படுதல் ஆகும். இந்த நோய் எளிதில் குணமடைந்து விடும் என்றாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் பரவலை தடுக்க பாதிக்கப்பட்டவர் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும், அவர்கள் பயன்படுத்திய கைக்குட்டைகளை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது, செல்போன் அதிகம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்வது மிகவும் நல்லது, தாங்களாகவே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும். மேலும் கண்ணனுக்கு யார் மருந்து போடுகிறார்களோ அவர்கள் மருந்து போடும் முன் மற்றும் மருந்து போட்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.