தவெக விவசாயிடம் ஒப்பந்தம்!! அடுத்த 5 ஆண்டுகளுக்கு கொடிக்கம்பத்தை அப்புறப்படுத்த கூடாது!!

0
144
Deal with Taveka Farmer!! Do not dispose of the flagpole for the next 5 years!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த  வி. சாலையில் வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாடு நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் மாநாடு பணிகள் 95 சதவித பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அங்கு தினமும் நடைபெறும் பணிகள் அனைத்தும்  மக்களையும் மற்றும் கட்சியினர்களையும் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த மாநாடுக்கு வரும் தொண்டர்கள் அழைத்து வர தனித்தனி குழுக்கள் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாடு முடிந்து செல்லும் போது கூட்டம் நெரிசல் தவிர்க்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் மதியம் இரண்டு மணிக்குள் வந்து அவர்களுக்கு ஒதுக்கக்பட்ட இருக்கையில் அமர வேண்டும். மேலும் மாநாட்டுக்கு வரும் ஆண் தொண்டர்கள் அனைவரும் விஜய் படம் போட்ட      டி-ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்க வேண்டும். அதே போல் பெண்கள் அனைவரும் அவர்கள் கொடுத்த சீருடையில் வரும்படி அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மாநாடு சரியாக நான்கு மணிக்கி தொடங்கப்படும். அதையடுத்து அந்த கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் இரவு எட்டு மணி அளவில் பேச தொடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாடு இரவு 9 அல்லது 9:30 மணியளவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்தமாநாட்டில் 100 அடியில் வைக்கப்படும் கட்சி கொடிக்கம்பத்தை விஜய் ஏற்றுகிறார். அந்த கட்சி கொடிக்கம்பத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எடுக்க கூடாது என அந்த நிலத்தின் உரிமையாளர் மணி என்பவரிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.