இறந்தவர் வீட்டுக்கு சென்றால் குளிக்க வேண்டும் என அனைவருக்கும் தெரியும். சாவு வீட்டுக்கு சென்று வந்தவுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கூட மற்றவர்களை தொட கூடாது என கூறுவார்கள். நம் முன்னோர்கள் சொன்னால் அதில் பல உண்மைகள் இருக்கும் என்பதை யாரும் மனதில் வைத்துக் கொள்வதில்லை. இறந்தவர்களின் உடலில் வைரஸ் கிருமிகள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் அப்போது உருவாகிவிடும்.
அது நம் மீது ஒட்டிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் அந்த சடலத்தை தொடும் போது அதில் உள்ள விஷ கிருமி மற்றும் விஷ அணுக்கலால் நிறைய பாதிப்பு ஏற்படும். அது மட்டும் அல்லாமல் இறந்தவர் நமக்கு மிக நெருங்கிய நிலையில் இருக்கும் போது அவர் நம்மை விட்டு பிரிந்ததால் நம் அழுகின்ற போது நம் உடல் மிக அதிக அளவில் சோர்ந்து விடும்.
அப்போது நாம் சாவு வீட்டுக்கு சென்று வந்த பிறகு குளித்தால் ஒரு வித புத்துணர்ச்சி கிடைத்து, நமக்கு சிறிது உடல் நலம் நன்றாக இருக்கும். ஆனால் இது எல்லாம் வெறும் கதை என பலரும் கூறுவார்கள். இதை சொன்னால் யாரும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என பேய், ஆவி என கூறி சாவு வீட்டுக்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என கூறினார்கள். இந்த செய்தி மக்களை பயத்தில் விழ செய்ததால் தான் இறந்தவர் வீட்டுக்கு சென்றால் அனைவரும் குளிக்கிறார்கள்.