Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

காட்டுமன்னார்கோவிலில் போலீசாருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த, லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் சில மாதங்களாக தலைமறைவாக இருந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளர் தற்போது மீண்டும் விற்பனை செய்து வருகிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் மற்ற போலீசார் லாட்டரி தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திருமூலஸ்தானம் ரோடு ஞானவிநாயகர் கூட்டுறவு சங்கம் எதிரில் நபர் ஒருவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் மடக்கினர். அப்போது, அவர் கத்தியை காண்பித்து குத்தி கொலை செய்துவிடுவேன் என போலீஸாரையே மிரட்டினார். அதையும் மீறி போலீசார் அவரை மடக்கினர் பிடித்தனர்.

மேலும், அவரிடம் இருந்த ஒரு நம்பர் லாட்டரி பில் புத்தகம், வெள்ளை தாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர் காட்டுமன்னார்கோவில் இந்திரா நகர் இளங்கோவன் மகன் மயில் (எ) ராகுல், (வயது 27) என்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்பவர் என்றும் தெரிந்தது. காட்டுமன்னார்கோவில் போலீசார் காதல் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version