தேசிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு!

0
150

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான பல்வேறு விதிமுறைகளை அவ்வப்போது ரிசர்வ் வங்கி மாற்றி அல்லது திருத்தி அமைக்கும் தொடர்ந்து முன்னேறிவரும் தொழில்நுட்பம், இணையதள பயன்பாடு, இணையதளத்திலேயே அனைத்து விதமான சேவைகளையும் பெறும் வசதி, உள்ளிட்டவை பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் வைத்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது புதிய விதிமுறைகளை மேற்கொள்ளும்.

அந்த விதத்தில் சில மாதங்களுக்கு முன்னர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு களுக்கான விதிகள் இணையதள பணப் பரிவர்த்தனை வரம்புகள் போன்ற பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் காரர்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தவிருப்பதாக ரிசர்வ் வங்கி மறுபடியும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்டவற்றை வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் மற்றும் நடத்தை விதிமுறைகள் 2022 என்ற பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ள முதன்மை வழிகாட்டி என்ற புதிய விதிமுறைகளை ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனாலும் உடனடியாக இதனை செயல்படுத்த இயலாது என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வந்ததால் இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்காக 3 மாத காலம் அவகாசம் வழங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளில் முக்கியமானவை என்ன என்பது தொடர்பாக தற்போது நாம் பார்க்கலாம்.

முதன்மை வழிகாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள படி வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யக்கூடாது என்பது ஒரு முக்கியமான விதி என சொல்லப்படுகிறது. கிரெடிட் கார்டு அனுப்பப்பட்ட வாடிக்கையாளர்கள் கார்டை பெற்ற தேதியிலிருந்து 30 நாட்கள் அதனை ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் வங்கிகள் தானாகவே ஆக்டிவேட் செய்யக்கூடாது.

வாடிக்கையாளர்களின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் வங்கிகள் அதனை ஆக்டிவேட் செய்ய வேண்டும். கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு otp அங்கீகரிக்கும் அடிப்படையில் தான் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு ஆக்டிவேட் செய்வதற்கு வாடிக்கையாளர்கள் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் அதனை வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் உள்ளிட்டவை இந்த அட்டையை கேன்சல் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு தேவை இல்லை என்பதை உறுதியளித்த 7 நாட்களுக்குள் கார்டை ரத்து செய்ய வேண்டும், இதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்த விதமான கட்டணத்தையும் வசூலிக்க கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் அனுமதி அல்லது ஒப்புதல் உள்ளிட்டவை இல்லாமல் கார்டு லிமிட்டை மாற்றக்கூடாது. கார்டு வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கார்டு வைத்திருப்பவரின் ஒப்புதலுடன் தான் கிரெடிட் லிமிட் வழங்கியுள்ளார்கள். எந்த காலகட்டத்திலும் அந்த விதிமுறையை மீறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். ஜூலை மாதம் 1ம் தேதியே இந்த விதி கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் இன்று கூறப்பட்டாலும், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில் இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செலுத்தப்படாத கட்டணம் சார்ந்த விதிகள் மற்றும் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டு வட்டி உள்ளிட்டவற்றை அமல்படுத்துவதையும், ரிசர்வ் வங்கி உறுதி செய்திருக்கிறது. முதன்மை வழிகாட்டி என்பது கட்டண நிலுவை, அதன் மீது விதிக்கப்படும் விதிகள், கூட்டு வட்டி, கணக்கீடு, உள்ளிட்டவற்றுக்காக மூலதனம் ஆட்கள் செய்யக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.