Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடன் தொல்லை தீர்க்கும் பரிகாரங்கள்!

கடன் பெற்றார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதைப்போல கடன் என்பது ஒரு கொடிய விஷயமாகத்தான் இருக்கிறது. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் உள்ளார்கள். கடன் நிவர்த்தி பரிகார முறைகளை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அதனை செய்து பலன் பெறுங்கள்.

புளியமரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பணப்பெட்டியில் வைத்து வரலாம்.

வெள்ளத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களுடைய கையால் பசுவிற்கு வழங்கிவரும் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்காவது உணவு உங்கள் கையால் வழங்க வேண்டும்.

வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதனை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும் தொடர்ந்து 11 வாரங்கள் இப்படி செய்ய வேண்டும்.

கோதுமையை அரைக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ உள்ளிட்டவற்றை சேர்த்து அரைத்துக் கொடுத்து வாங்கும் அந்த மாவு வீட்டில் இருக்கும்வரை பண பிரச்சனைகள் குறைந்திருப்பதை அனுபவத்தில் காணலாம்.

தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.

Exit mobile version