Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடன் தொல்லை உடனே தீர இதை செய்யுங்கள்

Debt Remedies By Spiritual-News4 Tamil Online Tamil News

Debt Remedies By Spiritual-News4 Tamil Online Tamil News

உலகில் மனிதனாக பிறந்து ஒவ்வொருவரும் வாழ எதாவது ஒரு வகையில் பணம் தேவைப்படும். ஒரு சிலர் இருப்பதை வைத்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். மற்ற சிலர் பல்வேறு ஆசைகளுடன் இருப்பதையெல்லாம் செலவழித்து கடனாளியாக மாறி விடுகின்றனர்.

இவ்வாறு எதாவது ஒருவகையில் கடனாளியாக ஆவது ஒரு வகை ஆனால் எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் கையில் இருக்கும் பணம் எதாவது ஒரு வகையில் விரயம் ஆகிக் கொண்டே இருக்கும்.இறுதியில் இவர்கள் கடனாளியாக மாறி எவ்வாறாவது இதிலிருந்து விடுபட மாட்டோமா என்றும் சிந்தித்து கொண்டிருப்பார்கள்.இப்படியும் ஒரு தரப்பினர் உள்ளனர்.

எந்தவகை கடனாக இருந்தாலும் அதிலிருந்து உடனடியாக விடுபட இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளிக் கிழமை நாளன்று இழைக்காத நெல்லி மரக்கட்டையை எடுத்து அதை நெய்யால் மெழுகி சர்க்கரையால் கோலம் போட்டு காலையில் 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளோ அல்லது மதிய வேளையில் 1 மணியில் இருந்து 2 மணிக்குள்ளோ சுக்கிர ஹோரையில் வெள்ளி விளக்கில் பசு நெய் விட்டு தாமரை தண்டு திரியால் தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.

மேலும் இத்துடன் ஐந்து வகையான பழம் நைவேத்தியம் செய்து தொடர்ந்து 27 வாரம் வணங்கிவர நம்மை அதிகமாக தொந்தரவு செய்யும் கடன்கள் அனைத்தும் அதிரடியாக விலகி கடனிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

Exit mobile version