Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

0
196

Dec 30 சேலத்தில் வெடிக்கவிருக்கும் மாபெரும் போராட்டம்!! பின்வாங்குமா மத்திய அரசு?

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலகளவையில் சேலம் இரும்பாலை தனியார் மயமாக்குதல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு,மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்தார்.

அவர் மாநிலங்களவையில் கூறியதவாறு:

சேலம் இரும்பாலை தனியாருக்கு விற்கப்படுவது உறுதி என்றும் இதற்கான முயற்சியில் மத்திய நிதியமைச்சகத்தின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும், இரும்புத் துறை அமைச்சகமும் , ஈடுபட்டுள்ளன என்றும் கூறினார். இதற்காக முதலீட்டாளர்களை இரும்பாலைக்கு அழைத்துச் செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அதற்கான பாதுகாப்பு அம்சங்களை மாநில அரசு ஏற்படுத்தி தரவில்லை, ஆனாலும் அதற்கான நிதி ஒப்பந்த புள்ளிகளை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அது வருகின்ற ஜனவரி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் நிகழும் என்று நம்புகிறேன் என அவர் பதிலளித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த பதிலானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி சார்பில் கேள்விகளும் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் சேலத்தில், இரும்பாலை தனியார் மயமாக்குதல் பிரச்சனை தொடர்பாக வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக தலைவர்
கி.வீரமணி அவர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதவாறு:
இந்நிலையில் சேலத்தில், இரும்பாலை தனியார் மயமாக்குதல் பிரச்சனை தொடர்பாக வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக தலைவர்
கி.வீரமணி அவர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதவாறு:
சேலத்தில் இரும்பாலையை வெறும் உருக்காலையாக மாற்றிய போதே திராவிடர் கழகம் போராடியது.அதன் பிறகு தனியார் மைய பாம்பு, புற்றிலிருந்து தலை காட்டியவுடன் அதனை திராவிடர் கழகம் போராட்ட தடியடி மூலம் புற்றுக்கொள் தள்ளியது.

இப்போது மீண்டும் துணிந்து,அது ஆதனிக்கும் அம்பானிக்கும்-கார்ப்பரேட் கன முதலாளிகளுக்கு மடைமாற்றம் செய்ய ஆயத்தமாக்கப்படும் அநியாயம் அரங்கேற இருக்கிறது.

இதனை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும், அத்துனை கட்சி அமைப்பினரும் ஓரணியில் நின்று ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தடுப்பணை எழுப்பியாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக 30-ம் தேதி சேலத்தில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை, திராவிடர் கழகம் மத்திய அரசின் பணிமனை முன்பு நடத்தும்.தடுப்பு நடவடிக்கை கண்டன குரல் டெல்லி வரை கேட்கும் வகையில் அனைத்து பொறுப்பாளர்களும் பிரச்சாரம், சுவர் எழுத்து உட்பட செய்ய தொடங்குங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.