டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

0
260
December 6 is a holiday for schools! Do you know which district?

டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.அதனால் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் கோவில்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் எளிய முறையில் தான் நடந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டில் கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது.அதனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வர சுவாமி கோவிலில்  கார்த்திகை தீபக் திருவிழா கொண்டாடப்படவுள்ளது.

இந்த விழாவானது தொடர்ந்து பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் பங்கு பெற தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

கடந்த 27 ஆம் தேதி வெகு விமர்சியாக கொடி ஏற்றம் நடைபெற்றது. இந்நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி மாலை மகா தீபம் ஏற்றப்படும்.மேலும் இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் தொடங்கியுள்ளது.தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் வரும் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வசதிக்கேற்ப 2000 பேருந்துகள் இயக்க முதல்வர் அனுமதித்துள்ளார்.போக்குவரத்தை சரி செய்ய சுமார் 4000 காவலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 60 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.