Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள்..! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கூட்டுறவு துணை ஆணையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற நாளை (நவ. 29) முதல் மூன்று நாட்கள் (டிச. 01 வரை) வீடுதோறும் சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வழங்க வேண்டும். மேலும், நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன் வழங்க வேண்டும். அதன்படி, டிசம்பர் 02ம் தேதி முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கும் வகையில் தேதி, நேரம் உள்ளிட்டவைகளை டோக்கனில் தெரிவிக்க வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களும் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் வாங்க செல்ல வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட வேண்டும். கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version