Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை!

Decided to marry a girl anyway! The final new groom was stoned to death!

Decided to marry a girl anyway! The final new groom was stoned to death!

ஒரு பெண்ணை எப்படியும் திருமணம் செய்ய வேண்டி எடுத்த முடிவு! முடிவான புது மாப்பிளையை கல்லால் தாக்கி படுகொலை!

கடந்த எட்டாம் தேதி சிவகாசி அருகே எரிந்த நிலையில் ஒரு ஒருவர் இறந்து கிடந்தார். அதுவும் செங்குன்றாபுரம் அருகே விருதுநகர் – எரிச்சநத்தம் மெயின் ரோடு பகுதியில் உடல் கருகி பலியாகி இருந்தார். மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் இருந்தது. அப்போது போலீசார் விசாரணையில் இறந்த நபர் செங்குன்றாபுரம் செல்வகணேஷ் என்ற 21 வயது நபர் எனபது தெரிய வந்தது. இதன் காரணமாக தற்போது ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் சொன்ன வாக்கு மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து எம் புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் பேரில் வத்திராயிருப்பு புதுபட்டியை சேர்ந்த, மரமேறும் தொழிலாளியான ராஜேந்திரனின் மகன் மாரிமுத்து என்பவருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்பதற்காக அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு வயது 24.

மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அவர் பல பகீர் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவர் தந்த வாக்குமூலத்தில் இவற்றையெல்லாம் குறிப்பிட்டுள்ளார். அவர் வந்திராயிருப்பு புதுப்பட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும், அப்போது உறவினர் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று மூன்று வருடங்களுக்கு முன்பு பெண் கேட்டுள்ளார்.

ஆனால் பெண் வீட்டிலோ பெண்ணுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. அதன் காரணமாக தற்போது திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறியுள்ளனர். அதனால் நான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அந்த பெண்ணுடன் இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்திய பிறகு எனக்கும், என் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் என்னை பிரிந்து சென்றுவிட்டார்.

அதன் பிறகு மீண்டும் அதே உறவினர் பெண்ணை பெண் கேட்டபோது, இரண்டாவது திருமணத்திற்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன் காரணமாக மீண்டும் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் எங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, அவரும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

எனவே எனது உறவினர் பெண்ணை 3வது திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். அப்போது செங்குன்றத்தை சேர்ந்த செல்வகணேஷ் என்பவருக்கும் எனது உறவினர் பெண்ணான நான் விரும்பிய பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை கேள்விபட்டேன். அப்போது எனக்கு பெண் கொடுக்க மறுத்த உறவினர்கள் மீதும், செல்வகணேசன் மீதும் எனக்கு மிகவும் ஆத்திரம் ஏற்பட்டது.

அதன் காரணமாக திருமணத்தை தடுக்க முடிவு செய்தேன். மேலும் செல்வகணேஷை  யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிட்டால், எனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், நிச்சயம் நிச்சயம் செய்தபின் மாப்பிள்ளை இறந்துவிட்டால் அந்த பெண்ணை யாரும் கட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்திலும் நான் செல்வகணேஷை கொல்ல சதி திட்டம் தீட்டினேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செல்வகணேஷ் அடிக்கடி எங்களது ஊருக்குள் வந்து சென்றார். அதுபோல் சம்பவத்தன்று அவர் எங்கள் ஊருக்கு வந்து மீண்டும் செங்குன்றாபுரம் சென்றபோது, அவருடன் அவரது வண்டியிலேயே நான் செங்குன்றாபுரம் சென்றேன். அப்போது வழியில் ஆள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து வாகனத்தை நிறுத்திவிட்டு, இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறி விட்டு சற்று தொலைவில் சென்றதோடு, அங்கிருந்து திரும்பி வரும்போது என் கையில் கூர்மையான கல் ஒன்றை மறைத்து எடுத்து வந்தேன்.

அப்போது திரும்பி வரும்போது அவர் பார்க்காத போது அவர் மீது அந்தக் கூர்மையான கல்லால் தாக்கினேன். அதன் காரணமாக அவர் அந்த இடத்திலேயே நிலைகுலைந்து சரிந்து விழுந்து விட்டார். எனவே செல்வகணேஷ் மீது அமர்ந்து அவரை கடுமையாக தாக்கினேன். பின்னர் அவர் உடல் மீது மோட்டார் சைக்கிளை வைத்து எரித்துக் கொன்றேன் என்றும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் எதுவும் தெரியாதது போல் நான் ஊருக்குள் வந்து விட்டேன். அப்போது ஊருக்குள் அனைவரும் செல்வகணேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென போலீசார் என்னை விசாரணைக்கு அழைத்தனர். முதலில் எனக்கு தெரியாது என்று கூறி இருந்தேன். அதன் பிறகு நானும் செல்வகனேசனும் ஒரே வாகனத்தில் சென்ற வீடியோ ஆதாரத்தின் மூலம் அவர்கள் என்னை கைது செய்து விட்டனர் என்று அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version