ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க முடிவு
கடந்த 2005 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ், கிராமப்புறங்களில் உள்ள வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயரிடப்பட்டது.
இந்த திட்டத்தில் பொது வேலை செய்ய விரும்பும் கிராமப்புர வயதுவந்தவர்களுக்கு, அரசின் ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தை சிறு நகரங்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசின் பொது முடக்கத்தை அமல் படுத்தியதால் கிராமங்களில் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சிறிய நகரங்களில் கிராமப்புற வேலை திட்டத்தை போலவே நகர்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை செயலாளர் சஞ்சீவ் குமார் அவர்கள் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு முதல் இந்தத் திட்டத்தை நகர்ப்புறங்களில் பரிசிளிக்க உள்ளதாக இருந்ததாகவும், தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இத்திட்டத்தை விரைவில் அமல்படுத்த அரசு முடிவு செய்வதாக சஞ்சீவ் குமார் அவர்கள் கூறினார். மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் நபர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 202 ஊதியமாக பெறுவார்கள் என்றும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்.