தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் சாகச சுற்றுலா தளங்கள் அமைக்க முடிவு!! எந்தெந்த இடம் என்று தெரியுமா!!
சாகச சுற்றுலாக்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசு தமிழகத்தில் 7 இடங்களை தேர்வு செய்திருப்பதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
சுற்றுலாத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி அந்த 7 இடங்கள் பின்வருமாறு :-
✓ திருவள்ளூரில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம்
✓ நாமக்கல்லில் உள்ள கொல்லிமலை
✓ திருப்பத்தூரில் உள்ள ஏலகிரி
✓ கரூரில் உள்ள பொன்னி ஆறு அணை
✓ தர்மபுரியில் உள்ள வத்தல்மலை
✓ திருவண்ணாமலை இல் உள்ள ஜவ்வாது மலை
✓ தென்காசியில் உள்ள குண்டாறு
ஆகிய ஏழு இடங்களில் சாகச சுற்றுலா தளங்கள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக சுற்றுலாத்துறை சார்பில் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், இந்த இடங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற அனைத்து உயர்தர வசதிகளும் செய்யப்படும் என்றும் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் முகாம்கள் அமைக்கப்படும் என்றும் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் முகாம்கள் அமைக்கப்படும் என்றும் சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.