ஆண்,பெண் தங்கள் பாலியல் உணர்வை அதிகரிக்க விருப்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்த வைத்தியங்களில் ஒன்றை பின்பற்றுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)தர்பூசணி துண்டுகள் – ஒரு கப்
2)ஜிஞ்சர் – ஒரு துண்டு
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
நீங்கள் முதலில் ஒரு கீற்று தர்பூசணி எடுத்து தோலுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
அதன் பிறகு ஒரு பீஸ் இஞ்சியை எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு சிறிய எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
பிறகு மிக்சர் ஜாரில் நறுக்கி வைத்துள்ள தர்பூசணி துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அடுத்து ஒரு பீஸ் இஞ்சி துண்டை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 05:
இந்த பானத்தை கிளாஸிற்கு ஊற்றி எலுமிச்சை சாறை அதில் சேர்த்து மிக்ஸ் செய்து பருகினால் பாலியல் உணர்ச்சி அதிகரிக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)வெண் பூசணிக்காய் – அரை கப்
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் அரை கப் அளவிற்கு வெண் பூசணி துண்டுகளை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
அதன் பிறகு இந்த வெண் [பூசணி சாறை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறை கலந்து பருகினால் பாலியல் உணர்வு தூண்டப்படும்.பாலியல் ஈர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் இந்த வெண் பூசணி சாறு பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கப்
2)ஜாதிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
3)கசகசா – அரை தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பசும் பால் கால் கப் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அரை தேக்கரண்டி கசகசாவை அதில் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அரை கப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு கசகசா ஊறவைத்த பாலை அதில் சேர்த்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.
ஸ்டெப் 03:
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு ஜாதிக்காய் பொடியை போட்டு கொதிக்க வைத்து இரவு நேரத்தில் பருகி வந்தால் பாலியல் உணர்ச்சி அதிகரிக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயம் போட்டுக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.குறைந்தது 5 முதல் 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டெப் 03:
இந்த நீரை குடித்துவிட்டு ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டால் பாலியல் உணர்ச்சி அதிகரிக்கும்.இரவு படுக்கைக்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு இந்த வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.