இது ஆண்ட பரம்பரை!! ஆளுங்கட்சி அமைச்சர் சாதி பாகுபாடு!!

0
110
Deeds Minister Murthy's talk of "Annual Inheritance" is becoming a controversy

dmk: பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி “ஆண்ட பரம்பரை” என  பேசியது சர்ச்சையாகி வருகிறது.

திமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் பேசியது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, மதுரை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக  பங்கேற்றார். அப்போது, போது மக்கள் மற்றும் திமுக கட்சியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி மேடையில் பேசினார்.

அதில், நம் சமூகத்தினர் சுதந்திர போராட்டத்தில் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் பேர் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி உயிரை விட்டு இருக்கிறார்கள். நம் சமூக வரலாற்றை நாம் திரும்பி பார்க்க வேண்டும்.  இப்போதெல்லாம்,  ஐந்து பேர் இறந்தால் கூட பெரிய தியாகிகள் போல் சித்தரித்து  வருகிறார்கள். நம் சமூகத்தினர் படிப்பறிவில் பின் தங்கி இருப்பதால் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் வரலாறு  மறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது தான் நம் சமூகத்தினர் கல்வியில் முன்னேறி வருகிறார்கள்.

அவர்கள் நம் சமூகத்தினரின் வரலாற்று தியாகங்களை திரும்பி பார்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. சாதி பாகுபாட்டிற்கு முற்றிலும் நேர் எதிர்மறையானது திராவிடக் கழகம் அக் கட்சியின் அமைச்சராக இருப்பவர் தன் சமூகத்தினரை உயர்த்தி பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், அமைச்சர் பேசிய காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அமைச்சரின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.