Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தெரிவித்துள்ள செய்தி குறிப்பில், 1-11-2021, 2-11-2021, 3-11-2021 ஆகிய நாட்களில் காலை 8மணி முதல் இரவு 7 வரை நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் நவம்பர் மதத்திற்கான அதிகபட்சமாக முன் நகர்வினை முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version