Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார்.

தற்போது இவர் டான் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் வினய், யோகிபாபு, அர்ச்சனா மற்றும் தீபா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் 7.45 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில், முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூல் செய்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இதுவரை 93 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டு தியேட்டரில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை குவித்த ஐந்து திரைப்படங்களில் டாக்டர் படமும் ஒன்று என கூறப்படுகிறது.

இந்நிலையில், வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி மாலை 6 மணிக்கு டாக்டர் படம் சன் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதேநாளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளிவரவுள்ளதாம்.

 

Exit mobile version