Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீபாவளிக்கு டிரஸ் எடுத்தால் ஆடு இலவசம்.. துணிக்கடையின் அதிரடி ஆஃபர்.!!

வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகை என்றாலே புதுதுணிகளுக்கு முதலிடம் தான்.

அத்தகைய புதுத் துணிகளை விற்பனை செய்யும் துணிக்கடைகள் அதிகரித்துள்ளன. இது போன்ற பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக துணிக்கடைகள் பல்வேறு ஆஃபர் மற்றும் பரிசுப் பொருட்களை அறிவிப்பது வழக்கம் அதில் துணிவகைகள் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக அறிவித்து பரிசு குலுக்கல் மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறார்கள்.

அந்த வகையில் வித்தியாசமாக திருவாரூரில் சாரதாஸ் என்ற துணிக்கடை ஒன்று இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பரிசுகளுக்கு ஆடு தருவதாக கூறியுள்ளது. இது திருவாரூர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நியூ சாரதாஸ் துணிக்கடையை மணி முருகன் என்பவர் கடந்த 17 வருடமாக திருவாரூரில் நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவி நந்தினி துணிக்கடையில் பணியாற்றுகிறார். சிறிய கடையாக தொடங்கிய இந்த ஜவுளிக்கடை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று தற்போது மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை செய்யும் ஜவுளிக்கடையாகவும் உள்ளது.

இந்த ஜவுளி கடைக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளிப் பண்டிகை பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் பரிசு ஒருவருக்கு 4 கிராம் தங்க காசும், இரண்டாவது முதல் நான்காவது பரிசு வரை மூன்று பேருக்கு ஆடு, ஐந்தாவது பரிசு 25 பேருக்கு பட்டுப்புடவை பரிசாக அறிவித்துள்ளன ர். இதில் ஆடுகளை பரிசாக அறிவித்து இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளர் மணி முருகன் கூறியது “எனது ஜவுளி கடைக்கு வரும் அனைவரும் கிராமப்புறத்தைச் சார்ந்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. பலரும் வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள். அவர்களில் பலர் சுயமாக வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் யாரேனும் எனது ஜவுளி கடையில் துணி வாங்கி இருந்தால் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆடு வழங்குவதன் மூலம் அவர்களது கவனம் ஆடு வளர்ப்பில் செல்லக்கூடும். தொடக்கப்புள்ளியாக கூட அமையலாம் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு நானும் எனது மனைவியும் கலந்து பேசி இந்த பதிவு செய்து அறிவித்தோம்” என கூறியுள்ளார்.

Exit mobile version