இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!

0
162

இரண்டு மாதத்திலேயே கருவில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறிந்துவிடலாம்! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!

மருத்துவத்துறையில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. அவற்றில் ஒன்றுதான் கருவில் இருக்கும் குழந்தை ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறியும் கருவி. இந்த ஆட்டோ டெலிஃபியா என்ற கருவி மூலம் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளதா என்பதை கண்டறிந்து விடலாம். இந்த கருவியின் விலை ஒரு கோடி ரூபாய். இந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கருவி பெரும்பான்மையாக தனியார் மருத்துவமனைகளில் தான் உள்ளது. கர்ப்பிணி பெண்களிடமிருந்து பெறப்படும் ரத்த மாதிரியை  இந்த கருவியில் செலுத்துவர். இந்த கருவி இரண்டு மணி நேரத்திலேயே சோதனை செய்து அதன் முடிவுகளை தெரிவித்து விடும்.

இந்த நவீன வசதியானது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே காணப்படுகிறது. இதற்கு அவர்கள் ஐந்தாயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் தற்பொழுது சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நிறுவியுள்ளனர். இதனால் அங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் குறுகிய காலத்திலேயே தங்களின் குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறிந்து விடலாம். பொதுவாக குழந்தைகளின் குறைபாடுகளை கண்டறிய ஐந்து மாதங்கள் ஆகும். ஆனால் இந்த கருவியின் மூலம் பரிசோதனை செய்வதால் ஒன்பது வாரங்களிலேயே அதாவது இரண்டு மாதத்திலேயே கண்டறிந்து விடலாம். இந்த ஆட்டோ டெல்ஃபியா மூலம் சோதனை செய்து கொள்ள அரசு மருத்துவமனை தற்பொழுது 300 மட்டுமே வசூலிக்கிறது.

இந்த கருவி மூலம் ஒரே நேரத்தில் 100 பெண்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாளடைவில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதை நிறுவினால் அனைத்து மாவட்ட பெண்களும் பெருமளவு பயனடைவர்.