Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உறுதியான 11 போட்டியாளர்கள்!கலை கட்டப்போகும் பிக் பாஸ் சீசன் 4!

தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ‘உங்களில் நான்’ உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.

முதல் 3 சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நான்காவது சீசன் கொரோனாவின் காரணமாக ஜூலை நடுப்பகுதியில் திரையிடப்பட வேண்டிய நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் அக்டோபர் மாதத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த மூன்று மாதங்களுக்கு பரபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 4  தமிழ் அக்டோபர் முதல் வாரத்தில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமலும் கிப்ரான் இன்னொருமுறை இசையில் கைகுலுக்கி உள்ளனர் என்றே கூறலாம். ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான இரண்டாவது விளம்பரத்தில் கமலஹாசனின் ஆடம்பரமான செயல்திறன்  பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியது.

இதுவரை 11 பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவர்கள் யாரெனில்

1.சனம்ஷெட்டி

2.கிரண் ராத்தோட்

3.கரூர் ராமன் 

4.ஷாலு ஷம்மு 

5.ரியோ ராஜ்

6.அமுதவாணன் 

7.அமிர்தா ஐயர்

8.ஷிவானி நாராயணன்

9.புகழ்

10.ஆர் ஜே வினோத்

11.பாலாஜி முருகதாஸ் 

ஆகியோர்கள் சம்மதம்  தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த போட்டியாளர்கள் அனைவரும் 2020 செப்டம்பர் 19 முதல் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version