பள்ளிகள் திறப்பதில் தாமதமா? அரசு வெளியிடும் அறிவிப்பை எதிர்நோக்கும் நிர்வாகம்!
கொரோனா தொற்றானது கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக மக்களை பாதித்தவாரக தான் உள்ளது.இந்நிலையில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.அதனையடுத்து தற்போது அரசாங்கம் கூறிய விதிமுறைகளை கடைபிடித்ததால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.அதன் பிறகு தற்போது தான் அனைத்து துறைகளும் திறக்கப்பட்டு வருகிறது.அந்தவகையில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது.
மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடங்களை பயின்று வருகின்றனர்.அதனையடுத்து 1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என பல கேள்விகள் எழுந்து வந்தது.அதற்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதல்வருடன் ஆலோசனை செய்த பிறகு அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியிருந்தார்.அதேபோல ஆலோசனைக்கூட்டம் முடிந்ததும் முதல்வர் அவர்களே வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பை செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார்.
அதனையடுத்து 1 ஆம் வகுப்பு மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்கள் உடன் இருக்கலாம் என கூறியிருந்தனர்.மாணவர்களால் அதிக நேரம் வகுப்பறையில் இருக்க முடியவில்லை என்றால் வீட்டிற்கு பெற்றோர்கள் அழைத்து செல்லலாம் எனவும் கூறியிருந்தனர்.இவ்வாறு அறிவிப்புகள் அடுத்தடுத்து வரவே அங்கன்வாடி மற்றும் விளையாட்டு பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளிவந்தது.அந்த பள்ளிகளும் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கபப்டும் என கூறியிருந்தனர்.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கல்வித்துறை அமைச்சர் கூறியதாவது,நாங்கள் மழலையர் மற்றும் விளையாட்டு துறை பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மட்டுமே செய்தோம் திறப்பது குறித்து வந்தவை தவறான செய்து என்று கூறினார்.அதனால் மழலையர் மற்றும் விளையாட்டு பள்ளிகள் நடத்துபவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.அந்தவகையில் பெண்களே பலர் விளையாட்டு பள்ளிகள் நடத்தி வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது அந்த பள்ளிகள் இயங்காமல் உள்ளதால் அதற்கு வாடகை கொடுப்பதே சிரமமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் ஜெருசலம் மழலையர் பள்ளி நிர்வாகி சாமுவேல் ராஜ் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தற்போதைக்கு மழலையர் பள்ளி திறக்கப்படும் தேதியாவது அறிவிக்கும் படி கேட்டுக்கொண்டார்.அதுமட்டுமின்றி 1 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்வது குறித்து பெற்றோரிடையே அதிக்க அச்சம் நிலவுகிறது.அதனால் அவர்களின் நிலையை புரிந்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.