வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் :! ஆய்வு மையம் அறிவிப்பு !!

0
124

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கயுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவ மழையானது அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் துவங்கவிருக்கும் நிலையில், அக்டோபர் இறுதி வரை மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தென் மாவட்டங்களை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பானது குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இன்று மாலை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வடதமிழகத்தில் பலத்த மழை எதிர்பார்க்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கன மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.