வழக்குகள் உள்ள நிலையில் சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குமா? – ரஷ்யா
ரஷியாவில் கடந்த சில தினங்களாக பல வகை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கூகுள், பேஸ்புக், டெலிகிராம், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களுக்கு அரசு கடுமையாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.
அதற்கு காரணமாக ரஷ்யாவின் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்க்கும் விதமாக ரஷ்யஅரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சமூகவலை தளங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுதல், சேவை வேகம் குறைக்கப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் ரஷ்யா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவை பற்றிய சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்காததால் சமூகவலைதளங்கள் மீது ரஷிய கோர்ட்டில் 3 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதில் கூகுள் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அந்நிறுவனம் இந்திய மதிப்பில் 1 கோடியே 23 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும்.
அதேபோல், டெலிகிராம் நிறுவனத்தின் மீது 3 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் நிரூபிக்கப்படுவதால் அந்நிறுவனம் ரஷ்ய அரசுக்கு இந்திய மதிப்பில் 1 கோடியே 64 லட்ச ரூபாய் அபராதம் கொடுக்க நேரிடும்.
மேலும் மீதி உள்ள பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனம் மீது தலா 2 புகார்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகார்கள் நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனங்கள் தலா 82 லட்ச ரூபாய் அபராதமும், சேவை வேகம் குறைப்பையும் சந்திக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், இதனை மக்கள் ஏற்பார்களா? என அரசு சிந்தித்திருக்குமா? என பல கேள்விகள் வெளிவந்தாலும் பொறுத்திருந்து பார்போம், என்ன நடக்கிறது என்று.