இந்திய நாட்டில் ஏழை மக்களுக்கும் புலம் பெயர்ந்தவர்களுக்கும் உணவு தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக PM-GKAY என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது விநியோக துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர்,குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களுக்கு கோதுமை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில், கே ஒய் சி சரிபார்ப்பின் மூலம் தகுதியற்றவர்கள் நீக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு புதிய செக் வைத்துள்ளது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் பயனை அடையாதவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன. தற்போது ஆவணங்களின் சோதனை பணி நடைபெற்று வருகிறது.சோதனைக்குப்பிறகு இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்களின் பெயர்களானது நீக்கப்படும்.
PHH மற்றும் AAY அடையாளங்களைப் பெற்றிருக்கும் குடும்ப அட்டைதாரர்களால் மட்டுமே PM-GKAY திட்டத்திற்கான தகுதியினைப் பெற முடியும். அதாவது முன்னுரிமை குடும்பங்கள் மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா போன்ற வகைகளைச் சேர்ந்த குடும்பங்கள் மாநில மற்றும் மத்திய அரசால் குறிப்பிடப்பட்ட அளவுகோல்களின்படி அடையாளங்கள் காணப்படுவர்.
அதன்பிறகு PMGKAY திட்டத்தின் மூலம் 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாகப் பெற முடியும். மேலும் முன்பிருந்தே கொடுக்கப்பட்டுவந்த மானிய உணவு தானியங்களை 5 கிலோ அளவில் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். 80 கோடி பேருக்கு எண்பதாயிரம் கோடி செலவில் உணவுப்பொருட்கள் கூடுதல் மானியமாக வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 கட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவந்த நிலையில் ஆறாவது கட்டம் தற்போது நடந்து வருகிறது.
வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள எச் ஐ வி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம், பழங்குடி குடும்பம்,60 வயது மேற்பட்ட சமூக ஆதரவின் உத்திரவாதம் இல்லாத குடும்பங்கள் போன்ற குடும்பங்கள் இதற்குத் தகுதி பெரும். மேலும், குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், ஊனமுற்றவர்கள், விதவைகள், தீவிர நோய்வாய்ப்பட்ட நபர்கள், வாழ்வாதாரம் அற்ற ஒற்றை பெண்கள் மற்றும் ஆண்கள் போன்றவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் ஆவார்.
முறைசாராத் துறையைச் சேர்ந்தவர்கள், ஆதரவற்றோர் பிரிவினைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கும் இத்திட்டம் பொருந்தும். மேலும், பாம்பு வசீகரம் செய்வது, தோல் பதனிடுவது, கைவண்டி இழுப்பது, கந்தல் மற்றும் செருப்பு எடுப்பது போன்ற தொழில் செய்பவர்களுக்கு மத்திய அரசின் இந்த திட்டமானது மிகவும் பயனுள்ள வகையில் அமையும்.