Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

டெல்லியில் 144 : வன்முறையில் இறந்த காவலரின் குடும்பம் அநாதையாக நின்ற கொடூரம்!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று பயங்கரமான வன்முறை வெடித்தது. இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வடகிழக்கு டெல்லியில் நேற்று போராட்டம் தீவிரமடைந்து வன்முறையானது. மஜ்பூரில் ஏற்பட்ட கல்லெறி சம்பவத்தால் ரத்தன் என்ற டெல்லி காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கலவரத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும், துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களுக்கும் கலவரம் அதிகரித்தது. இதனையடுத்து அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டு கலவரம் உச்சகட்டத்தை அடைந்தது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்ததோடு, வன்முறையில் இறந்த காவலருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தார். போராட்டத்தில் சிலர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் ஊர்வலமாக நடந்து வந்த போது இரு கூட்டத்திற்கும் இடையே கலவரம் வெடித்தது. சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய சட்டத்தை திரும்ப பெறக்கோரிய சம்பவத்தில் இறந்த ரத்தன் லால் என்ற காவலரின் குடும்பம் அநாதையாகி உள்ளது. அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் டெல்லியில் அதிர்ச்சியும், சோகமும் ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நடைபெறுவதாலும், மீண்டும் வன்முறை நடக்காமல் இருக்கவும் வடகிழக்கு டெல்லி பகுதிகளான மஜ்பூர், கர்தாம்பூரி, தயால்பூர், சாந்த்பாக் போன்ற இடங்களில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version