Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கல்லூரியில் நுழைந்து மாணவிகளை கற்பழித்த போதை ஆசாமிகள்; டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

கல்லூரியில் நுழைந்து மாணவிகளை கற்பழித்த போதை ஆசாமிகள்; டெல்லியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

சென்ற வாரம் டில்லி கார்கி கல்லூரியில் மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது, சில போதை ஆசாமிகள் விழா நடக்கும் கல்லூரிக்குள் புகுந்து பலாத்காரம் செய்யும் எண்ணத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அங்கிருந்த மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை சந்தித்து பயத்தை அதிகரித்தது.

இந்த கொடூர சம்பவத்தை பற்றி ஒரு மாணவி தான் கற்பழிக்கப்பட்டதாக சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவிட்டார். ஆண்டு விழாவின் போது நடந்த இச்சம்பவத்தை தெரிந்தும், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும், காவல் துறையினரும் எங்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேடிக்கை பார்த்ததாகவும் மாணவிகள் தமது குற்றச்சாட்டை முன் வைத்தனர். அங்கு வந்த போதை ஆசாமிகள் கல்லூரி நபர்கள் கிடையாது முப்பது வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்றும் அனைவரும் மது குடித்துவிட்டு புகைபிடித்த படங்களும் எங்களிடம் இருக்கிறது என்று ஒரு மாணவி கூறினார்.

இந்த சம்பவத்தால் சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். சில மாணவிகள் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகள் கும்பலாக வந்ததால் எங்களால் தப்பிக்க முடியவில்லை என்றும் மாணவிகள் சார்பாக கூறப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக யாரும் காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தை குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றும் கல்லூரியின் முதல்வர் பிரமிளா குமார் தெரிவித்துள்ளார்.

கல்லூரியிலேயே நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த செய்தி குறித்து எங்கும் பெரிதாக பேசப்படவில்லை என்பது வேதனையான விஷயமாகும். பெண்கள் கல்லூரிக்குள் பாதுகாப்பு இருந்தும் பாலியல் சம்பவம் அரங்கேறியிருப்பது டெல்லியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Exit mobile version