Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!

கொரோனாவை தடுக்க சிங்கப்பூர் பார்முலா! அசத்தும் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

கொரோனாவை முன்னெச்சரிக்கையாக தடுக்கும் வகையில் வீட்டில் தனிமைப்படுத்திய நபர்களின் செல்போன் எண்களை டிராக் செய்யவுள்ளதாக டெல்லியின் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் நோய் தொற்றினை தடுக்க கொரோனா அறிகுறி கொண்ட பலர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வகையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா தொற்று அறிகுறியுடன் வீட்டில் தனிமையில் வைக்கப்பட நபர்கள் வெளியே வருவதை தடுக்க அவர்களின் செல்போன் எண் மூலம் டிராக் செய்ய டெல்லி காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; காவல்துறை கண்காணிப்பில் இருப்பவர்களின் கைபேசி எண்களைக் கொண்டு அவர்கள் வெளியே வருவது கட்டுப்படுத்தப்படும் மற்றும் மற்றவரை தொடர்பு கொண்டு பேசுவதும் கண்காணிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த கண்காணிப்பு செயல்பாட்டில் முதலில் 11 ஆயிரம் கைபேசி எண்கள் முதற்கட்டமாக கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக 14 ஆயிரம் கைபேசி எண்களுடன் மொத்தமாக 25 ஆயிரம் செல்போன் எண்களை டெல்லி போலீசார் டிராக் செய்து வருகின்றனர்.

கொரோனா அறிகுறியுடன் வீட்டில் இருந்து வெளியில் வராமல் தடுக்க இந்த செல்போன் டிராக் பார்முலா பயன்படும் என்று டெல்லி முதல் கூறினார். இந்த பார்முலா சிங்கப்பூரில் நடைமுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version