Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகள் போராட்டத்திற்கு பெருகிவரும் ஆதரவு!

டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் மத்திய அரசுக்கு உள்நாட்டு அளவில் மட்டும் கிடையாது வெளிநாட்டு அளவிலும் மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி டெல்லிக்கு லட்சக்கணக்கான விவசாயிகள் நுழைந்து போராடி வருகிறார்கள்.

இதற்கு முன்னரே கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டெல்லி விவசாயிகளின் போராட்டத்துக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கின்றார் இந்த நிலையில் தற்போது ஐநா சபையின் பொதுச் செயலாளரும் இந்த விவசாயிகளுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கின்றார்.

அமைதியான முறையில் போராட்டம் செய்வதற்கு மக்களுக்கு உரிமை இருக்கின்றது அதிகாரிகள் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஐநாவின் பொது செயலாளர் அந்தோனியா குட்ரஸின் செய்தித் தொடர்பாளர் இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்கள் சம்பந்தமாக தெரிவித்திருக்கின்றார்.

விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்றனர் கனடா நாட்டு பிரதமரின் கருத்தை கண்டிப்பதாக இந்திய நாட்டுக்கான கனடாவின் ஹை கமிஷனரை நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறை தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இந்தியாவின் விவசாயிகள் போராட்டம் குறித்து சில வெளிநாட்டு தலைவர்களுடைய தவறான தகவல்களை நாங்கள் கண்டிக்கின்றோம் இது போன்ற கருத்துக்கள் தேவையற்றவை அதிலும் குறிப்பாக ஒரு ஜனநாயக நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் அரசியல் அமைப்பிலும் தலையிடும் படியான செயல்கள் ஏற்றுக்கொள்ள இயலாத குறுக்கீடாக கருதப்படும் இந்த நடவடிக்கைகள் தொடருமானால் இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில்தான் ஐநாவின் பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீஃபன் டுஜாரிக் விவசாயிகள் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

அனைத்து நாட்டிலும் இருக்கும் சீக்கிய அமைப்புகள் அங்கே தங்களுக்கான செல்வாக்கை பயன்படுத்தி டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் தலைமுறைகளுக்கு எடுத்துச் சென்று இது தொடர்பாக வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்குமாறு தெரிவித்து இருந்தன இதன் காரணமாகவே கனடா பிரதமரின் ஆதரவு ஐநா பொதுச் செயலாளரின் ஆதரவு என விவசாயிகளின் போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு பெருகி வருகின்றது.

Exit mobile version