Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விவசாயிகள் போராட்டம்! டெல்லியில் வெடித்த வன்முறை!

குடியரசு தின விழா நேற்றைய தினம் தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் சார்பாக நடந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகளுக்கும். காவல்துறையினருக்கும். தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒட்டுமொத்த டெல்லியிலும் பதட்டமான சூழ்நிலை உருவானதால், இணையத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

நேற்றைய தினம் காலையிலிருந்தே பல மாநிலங்களிலிருந்து டிராக்டர்களில் கிளம்பிய விவசாயிகள், டெல்லியின் எல்லைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். பல இடங்களில் காவல்துறையினர் மிகக்கடுமையான தடுப்புகளை உண்டாக்கி வைத்திருந்த போதும் ,விவசாயிகள் அந்த தடைகளை தகர்த்து டெல்லியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் இரண்டு மாத காலமாக விவசாயிகள் சார்பாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தின் ஒரு மைல்கல்லாக, குடியரசு தினத்தை முன்னிட்டு செங்கோட்டையை மையமாகக்கொண்டு தேசியக் கொடிகளை ஏந்தியபடி டிராக்டர்களில் பேரணி நடத்துவது என விவசாயிகள் சார்பாக முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இருந்தாலும் இந்த ட்ராக்டர் பேரணியை உச்சநீதிமன்றம் தடுப்பதற்கான எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இந்த சூழ்நிலையில். காவல்துறையினர் உண்டாக்கிய தடுப்புகளை உடைத்து விவசாயிகள் டெல்லியின் மத்திய பகுதியாக இருந்து வரும் செங்கோட்டை பகுதிகள் சென்றிருக்கிறார்கள். அந்த விவசாயிகளின் ஏராளமானோர் முன்னதாகவே தீர்மானம் செய்யப்பட்ட பாதைகளில் இருந்து விலகிவிட்டதாக விவசாயிகள் மீது குற்றம் சுமத்திய டெல்லி காவல்துறையினர் அந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தடியடி போன்றவற்றை பிரயோகம் செய்தார்கள்.

புதுடில்லியின் எல்லைகளில் போராட்டம் செய்து வந்த விவசாயிகள், நேற்றைய தினம் அதிகாலையிலிருந்து டெல்லி காவல்துறையினருடன் தகராறு செய்ய தொடங்கினார்கள். அந்த விவசாயிகள் டெல்லிக்கு நுழைவதற்கு காவல்துறையினர் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து தடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. காசிப்பூர் சிங்கு மற்றும் டிகிரி போன்ற வேலைகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டில்லிக்கு படையெடுத்தார்கள். எப்பொழுதும் குடியரசு தினத்தன்று நடைபெறும் பேரணி முடிந்தபிறகு டிராக்டர் பேரணி நடத்திக் கொள்ளலாம் என்று காவல்துறையினர் அனுமதி கொடுத்தார்கள். ஆனாலும் காவல்துறையினர் தெரிவித்த நேரத்திற்கு முன்பாகவே விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிட்டன.

இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் செங்கோட்டைக்கு நுழைந்திருக்கிறார்கள். செங்கோட்டையில் ஒரு சில மாடங்களில் கொடிகளை ஏற்றி இருக்கிறார்கள். தங்களுடைய டிராக்டரை செங்கோட்டை வளாகத்திற்குள் ஓட்டிச்சென்ற விவசாயிகள், அங்கேயும் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பின்பு டெல்லியின் டியூ மார்க் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தபோது, ஒரு டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு விவசாயி பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தார். இதுபோன்று டெல்லியில் அந்தந்த இடங்களில் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும், இடையே மோதல் நீடித்தது.

டெல்லி ராஜபாதை வரை செல்லும் முயற்சியில், நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற ஐடிஒ- என்ற பகுதிக்குள் வந்த நூற்றுக்கும் அதிகமான விவசாயிகளின் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை பிரயோகம் செய்து தடுத்தார்கள். இதனை தொடர்ந்து டெல்லியின் முக்கிய பகுதிகளில் நேற்றைய தினம் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தெரிகிறது.

Exit mobile version