Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது!

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது!

நண்பனின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த டெல்லி அரசு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிகாரி

டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் பிரமோதய் ஹாஹா. இவரது நண்பன் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி உயிரிழந்துவிட்டார்.

தந்தையை இழந்து தனிமையில் வாடி வந்த நண்பனின் 14 வயது மகளை தன் வீட்டில் தங்க வைத்த காக்கா, அச்சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் வீட்டை விட்டு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இதற்கு பயந்துபோன அந்தச் சிறுமி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளாள்.

பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம் அடைந்தாள். தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி ஹாஹாவிடமும், அவரது மனைவியிடமும் கூறியுள்ளாள். இதனால் ஷாக்கான ஹாஹாவின் மனைவி தன் மகனிடம் சொல்லி, சிறுமியின் கர்ப்பத்தைக் கலைக்க மருந்து வாங்கி வந்து கொடுத்துள்ளார்.

கைது செய்த போலீசார்

இச்சம்பவத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவரிடம் தனக்கு நடந்த கொடுமையை அச்சிறுமி கூறியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனநல மருத்துவர் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தார். தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து சமூகவலைத்தளங்களில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இச்செய்தியை அறிந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி பிரமோதய் ஹாஹாவை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பிரமோதய் ஹாஹா மீதும், அனுமதியின்றி கருச்சிதைவு ஏற்படுத்துதல் போன்ற சட்டப்பிரிவுகள் படி அவரது மனைவி மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version