இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்!

0
121
Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்! சரிகட்டுமா மத்திய அரசு

தற்பொழுது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு காணப்படுகிறது.குறிப்பாக மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, தற்போது டெல்லியில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி கூடிய விரைவில் இருளில் மூழ்கிப் போகும். அந்நிலைக்கு தள்ள படாமலிருக்க மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவ்வாறு கூறியிருந்தார். டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான் கர்நாடகா ,பஞ்சாப் போன்ற அனைத்து மாநிலங்களிலும் தற்பொழுது நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் அதிக அளவு மின் தட்டுப்பாடு காணப்படுகிறது. இந்த நிலக்கரி பற்றாக்குறையை குறித்து அமித்ஷா மத்திய மின் மற்றும் நிலக்கரி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை இன்று சந்தித்து ஆலோசனை ஒன்று நடத்த உள்ளார். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் NTPC அதிகாரிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்பொழுது இந்தியாவில் அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்கும் சுரங்கங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சுரங்கங்கள் உள்ள பகுதியில் பெரு வெள்ளம் மற்றும் மழை காரணமாக நிலக்கரியை எடுக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அனல் மின் நிலையங்களுக்கு சுரங்கங்களால் போதுமான அளவு நிலக்கரியை தர முடியவில்லை.

அதனால் அம்மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது, இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை எவ்வாறு உபயோகிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தமிழகத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்று தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். ஆனால் இதற்கு முன்பாக, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் உள்ளது என்றும், அதனைக்கொண்டு நாடு முழுவதும் மின்சாரம் விநியோகிக்கலாம் இன்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியிருந்தார். இவ்வாறு கூறியிருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இவரைப் போல தான் தற்பொழுது தமிழகத்தில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளது என்று கூறியுள்ளனர்.நாளடைவில் இந்த பாதிப்பை தமிழகமும் சந்திக்க நேரிடும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.