சுவையான நூடுல்ஸ் கொத்து இடியாப்பம் – எப்படி செய்வது?

0
82
#image_title

சுவையான நூடுல்ஸ் கொத்து இடியாப்பம் – எப்படி செய்வது?

சிலர் ஆசையாக நூடுல்ஸ் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கொள்வார்கள். உங்களுக்கு நூடுல்ஸ் சாப்பிட ஆசை இருக்கா? கவலை வேண்டாம்… நம்ம ஊர் சத்தான நூடுல்ஸ் ஸ்டைலில் “இடியாப்பம்” செய்து சாப்பிட்டால் அதன் சுவைக்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள்.

சரி வாங்க… எப்படி நூடுல்ஸ் கொத்து இடியாப்பம் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

இடியாப்பம் (உதிரியானது) – 4 கப்

பொடியாக நறுக்கிய கொத்த மல்லி – 4 மேசைக்கரண்டி

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 100 கிராம்

பொடியாக நறுக்கிய தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத் தூள் – 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

மல்லித் தூள் – 5 மேசைக்கரண்டி

சோம்புத் தூள் – 2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

வேக வைத்த நாட்டுக் காய்கறிகள்

கத்திரிக்காய், முள்ளங்கி, கொத்தவரை, காராமணி, சேனைக்கிழங்கு – தலா 50 கிராம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

இதன் பின்னர் தக்காளி, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர், சோம்புத்தூள் தவிர மற்ற எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வேக வைத்த காய்கறிகளை தண்ணீருடன் சேர்க்க வேண்டும்.

இதன் பிறகு, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரே தெரியாமல், எண்ணெய் மேலே திரண்டு வரும்போது, இடியாப்பம் சேர்த்துக் கிளற வேண்டும்.

குறைந்த தணலில் வைத்து, இடியாப்பம் குளிர்ந்திருப்பதால் தண்ணீர் தெளிக்க வேண்டும்.

இதன் பிறகு, 3 நிமிடங்களுக்கு வேகவிட்டு, கடைசியாக சோம்புத் தூள் தூவி இறக்கினால் கொத்து இடியாப்பம் ரெடி.

காய்கறிகளுக்கு பதிலாக காளான்களை கூட சேர்க்கலாம்.