சுவையான “இஞ்சி இனிப்பு ஊறுகாய்”.. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
அனைவருக்கும் பிடித்த சைடிஷ் ஊறுகாய்.இதில் மாங்கா ஊறுகாய்,நார்த்தங்காய் ஊறுகாய்,எலுமிச்சை ஊறுகாய்,பூண்டு ஊறுகாய்,தாக்களி ஊறுகாய் என்று பல வகைகள் உள்ளன.அதிலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் ஊறுகாயில் ஒன்று ‘இஞ்சி இனிப்பு ஊறுகாய்’.இந்த இஞ்சி இனிப்பு ஊறுகாயை வீட்டு முறையில் சுவையாக செய்யும் முறை கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*இஞ்சி – 1/4 கிலோ
*நல்லெண்ணெய் – தேவையான அளவு
*கடுகு – 1 தேக்கரண்டி
*புளி – பெரிய எலுமிச்சம் பழ அளவு
*பச்சை மிளகாய் – 2
*வெல்லம் – 1/2 கப்(பொடித்தது)
*மஞ்சள் தூள் – 2 சிட்டிகை அளவு
*பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.அதில் 1/4 கிலோ இஞ்சி சேர்த்து சுத்தமாக கழுவிக்கொள்ளவும்.பின்னர் அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.ஒரு பவுல் எடுத்து அதில் 1 பெரிய எலுமிச்சம் பழ அளவு புளி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு மற்றும் 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்கள் மற்றும் இஞ்சி துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி நன்கு வதங்கி வந்ததும் அதில் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.அடுத்து மஞ்சள்தூள் சேர்த்து அதோடு எடுத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
இந்த கலவை நன்கு கொதித்து வந்த பின்னர் 1/4 கப் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறவும்.வெல்லம் கரைந்து நன்கு கொதிக்கும் தருணத்தில் அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஆறவிடவும்.
இந்த இனிப்பு இஞ்சி ஊறுகாய் நன்கு ஆறியப் பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.இதை 3 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
உணவில் இஞ்சை சேர்த்து உண்டு வந்தோம் என்றால் சுவாச பிரச்சனைகள்,மலச்சிக்கல், ஜீரணசக்தி,ரத்த கசிவு ஆகியவை நீங்கும்.