இதுவரை இல்லாத வகையில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இணைந்து பரவுகிறது! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!!

0
136

இதுவரை இல்லாத வகையில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் இணைந்து பரவுகிறது! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலின் பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவின் உருமாற்றங்களான டெல்டா மற்றும் ஒமைக்ரான் சேர்ந்து புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளது. இதற்கு டெல்டாக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெல்டாக்ரான் வைரஸ் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவிலும் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்தியாவில் 568 பேருக்கு இந்த டெல்டாக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கர்நாடகாவில் 221 பேர் இந்த புதிய வகை டெல்டாக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்த புதிய வகை டெல்டாக்ரான் வைரஸ், கொரோனா தொற்றை போன்று அதிவேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து பிரிட்டன் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகையில்,

உடல் அதிக வெப்பத்துடன் கடுமையான காய்ச்சல் இருக்கும் எனவும், சாதாரணமாக தொடுவதன் மூலமே உடல் சூட்டை உணர முடியும் என தெரிவித்துள்ளனர். அதுபோல் இதுவரை வந்த கொரோனா மாதிரிகளை விட இது அதிக இருமலை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். மேலும் நுகரும் திறன் செயலிழத்தல் அல்லது மாற்றமடைதல் ஆகியவை இந்த தொற்றின் அறிகுறிகளாகும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.