Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்டா மாவட்ட விவசாயிகள் மாநில அரசுக்கு கோரிக்கை:? விவசாயிகளுக்கு கைக்கொடுக்குமா தமிழக அரசு?

கடந்த 16 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த வருடம் சரியான பருவ நீரும், தண்ணீர் திறப்பு விவசாயிகளுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.அரசின் ஒத்துழைப்பாலும் தண்ணீ செல்லும் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு சரியான நேரத்தில் கடைமடைக்கு செல்ல உதவியுள்ளது.


கொரோனா காலகட்டத்தில் கூட மூன்று லட்சத்தை ஏக்கரை தாண்டி அதிகமாக ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி செய்துள்ளது.கடந்த வருடம் போல் இல்லாமல் எவ்வித புயல் ,வெள்ளம் போன்ற எவ்வித பாதிப்புமின்றி பிரதமர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு உதவியது. இத்திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு ப்ரீமியம் தொகை கட்டுவதற்கு கடந்த மாதம் 31-ம் தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினாலும், கணிணியின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மற்றும் பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் இடையூறுகளும் பிரீமியம் தொகை கடன் தொகை கட்ட இயலாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தஞ்சை,திருவாரூர் நாகை, ஆகிய டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த விவசாயிகள் தனது காப்பீட்டு தொகையைக் கட்ட இயலாமல் போக நேர்ந்தது. இதுவரை 1.63 லட்சம் ஏக்கருக்குதான் பயிர் காப்பீடு தொகை செலுத்தியுள்ளனர். மீதம் உள்ள 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்க் காப்பீடு செய்ய முடியவில்லை. இந்நிலையை கருத்தில் கொண்டு காப்பீடு ப்ரீமியம் தொகை செலுத்தும் தேதியை இன்னும் 15 நாட்கள் நீட்டித்துத் தரும்படி ஜி. கே .வாசன் கேட்டுக்கொண்டார்.
காவிரியில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

விவசாயிகள் , குறுவை சாகுபடி செய்துள்ள அனைவரும் பயிர்க் காப்பீடு தொகை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் 2019-2020 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பு தொகையை உடனடியாக வழங்கும்படியும் தமிழக அரசிடம் ஜி கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version