Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆகஸ்ட் 9 தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க கோரிக்கை

ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் கோரிக்கை உள்ளது.நம் இந்திய நாட்டில் பல்வேறு இடங்களில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களின் நாகரீகம் ,பண்பாடு, பழக்கவழக்கம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என சமூகத்தில் வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கான கோரிக்கையை பிரதமர் மோடியிடம் கூறியுள்ளனர்.நம் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் இனம் ,ஜாதி ,மதம் போன்றவற்றை பிரித்து வாழும் வகையில் இருக்கின்றது.நம் இந்திய நாட்டில் பழங்குடியினர் வாழ்ந்து வருவதால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு என ஒரு நாட்கள் ஒதுக்கி விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தோனேஷியா ,ஜப்பான் போன்ற இடங்களில் பழங்குடியின மக்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.ஐக்கிய நாடுகள் சபையில் டிசம்பர் 1994 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டு செப்டம்பர் 13, 2007ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பழங்குடியின மக்கள் மக்களிடமிருந்து விலகி வாழ்ந்து வருகின்றனர்.பொதுவாகவே அவர்கள் மீது கவனம் செலுத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அவர்களின் கலாச்சாரம், நம்பிக்கை ,மொழி மற்றும் பிற நடைமுறைகளை வைத்து அவர்கள் தனித்து வாழ்கின்றனர் .இந்திய மட்டுமல்லாமல் பல நாடுகளில் போராடி இருக்கின்றனர். இந்த தொழில்நுட்ப உலகில் பழங்குடியினர்கள் ,தனது சமுதாயத்திடம் தனித்து வாழ்கின்றனர் .இவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தேசிய விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது.

Exit mobile version