Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை! இன்று பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா?

Demand of milk producers! Will the negotiations succeed today?

Demand of milk producers! Will the negotiations succeed today?

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை! இன்று பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா?

தமிழ்நாடு பால் உற்பத்தையாளர்கள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில்  ஆவின் பால் கொள்முதல்  விலை  உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அந்த கோரிக்கைக்கு ஆவின் நிறுவனம் எந்த ஒரு பதிலையும் கூறவில்லை. திட்டமிட்டபடி பால் நிறுத்த போராட்டம் நடைபெறும்,கறவை மாடுகளுடன்  சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் ரூ 32க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. மேலும் அவர்களிடமிருந்து இதர  பால் பொருட்களும் கொள்முதல் செய்யப்படுகின்றது. ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலும் ரூ 7  ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அது பற்றி ஆவின் நிர்வாகம் நிதி நெருக்கடியின் இருப்பதினால் கொள்முதல் தொகையை அதிகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும் பாலுக்கு 35 ல் லிருந்து 42 க்கும் , எருமை பாலுக்கு ரூ.44 இல் இருந்து ரூ 51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பால் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் மற்றும் இதர பொருட்கள்  கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் ஆவின் நிறுவன செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் உடனே ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். ஆவின் பால் மற்றும் அதன் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version