Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா?? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!  

Demanding 25 crore compensation!! Shocking information that came out from the father-in-law's ban!!

Demanding 25 crore compensation!! Shocking information that came out from the father-in-law's ban!!

25 கோடி இழப்பீடு கோரி மாமன்னனுக்கு தடையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

மாமன்னன் என்ற திரைப்படம் மாரி செல்வராஜ் இயக்குனராகவும்  உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் தமிழ் அரசியல் பற்றிய படம் ஆகும். இந்த திரைப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு பிரபல நடிகர்களும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹுமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகயுள்ளது. இத்திரைப்படம்  அழுத்தமான அரசியல் கருத்துகளை உள்ளடக்கிய படமாகும். மேலும்  இத்திரைப்படம் தற்போது வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்து.

இந்த மனுவை ராமசரவணன் என்பவர் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அளித்துள்ளார். அந்த மனுவில் எஞ்சல் என்ற திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, யோகிபாபு போன்ற பல நடிகர்களை வைத்து படம் தயாராகி வந்தது . இந்த படத்தை கே.எஸ். அதியமான் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு 2018 யில் தொடங்கப்பட்டு 80% சதவிதம் முடிவடைந்தது. இந்நிலையில் ஏஞ்சல் படத்தை முழுவதும் முடிக்காமல் பாதியில் விட்டு மாமன்னன் படத்தில்  உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்.

இதனால் தனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராமசரவணன் மனுவில்  25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் மற்றும் மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனுவை விரைவில் விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version