இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!!

0
182
Dengue fever is increasing everywhere!! These 10 districts are the top.. Guys beware!!

இங்கெல்லாம் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!! இந்த 10 மாவட்டம் தான் டாப்.. மாக்களே எச்சரிக்கை!!

கேரளாவில் நைல் என்ற காய்ச்சல் தொற்றானது தீவீரமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து மழைக்காலங்களில் அதிகளவு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதுண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அதில் 10 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த வருடமும் டெங்கு காய்ச்சலானது சற்று தீவிரமாகி வருகிறது.

இந்த அதிகரிப்பு குறித்து சுகாதாரத்துறையானது திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எச்சரிக்கையே விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் அதிகளவு தொற்று பாதிப்பு இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இன்றைய நிலவரப் படி தமிழகத்தில் 136 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக மற்ற மாவட்டங்களுடன் தற்பொழுது கோயம்புத்தூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களும் இதனுடன் இணைந்துள்ளது. தங்கள் பகுதியில் இருக்கும் அசுத்தமான நீரை அகற்றவும் தங்களது வீடுகளில் சுகாதாரத்தை கடைபிடிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். கொசுக்கள் அண்டாதவாறு குளிர்சாதன பெட்டிகள், டயர் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளும் படியும் கூறியுள்ளனர். மேற்கொண்டு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மருத்துவமனையை நாடி அதற்கு உண்டான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.இதுமட்டுமின்றி நைல் வைரசும் தமிழகத்தில் பவாமலிருக்க நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தீவீர சோதனை மற்றும் வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது.